ETV Bharat / state

இலங்கையின் கட்டுப்பாட்டில் 128 தமிழக மீனவர்கள்; வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 128 தமிழக மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்க, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மு.க ஸ்டாலின், மீன்பிடி படகு, ஜெய்சங்கர்
மு.க ஸ்டாலின், மீன்பிடி படகு, ஜெய்சங்கர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 5:45 PM IST

சென்னை: வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இலங்கையில் ஆட்சி மாற்றம் அடைந்த பின்னும் இதே நிலை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நேற்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை; எங்கும் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன் உறுதி!

அக்கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், IND-TN-10-MM-459 மற்றும் IND-TN-10-MM-904 பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (23-10-2024) கைது செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, தான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துவதை சுட்டிகாட்டியுள்ளார்.

இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டு நடவடிக்கைக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வினைக் கொண்டுவரும் என தான் நம்புவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.