ETV Bharat / state

மீனவர்கள் விவகாரம்; இலங்கை அதிபருக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை! - என்ன தெரியுமா? - ANURA KUMARA DISSANAYAKE

இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசியுள்ளது வரவேற்கத்தக்கது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி-இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே சந்திப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி-இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே சந்திப்பு (Credits- ETV Bharat Tamil Nadu, CM Stalin X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2024, 9:29 PM IST

சென்னை: மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்த பேச்சுவார்த்தையில், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்கொலைக்கும் காரணியாக உள்ள எல்லை மீறி மீன் பிடிப்புக்கான கைது பிரச்சனைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இருவரும் பேசினர்.

இதையடுத்து, இனி மீனவர்கள் விவகாரத்தில் எந்த ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கையோ அல்லது வன்முறையோ இல்லாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த முடிவு வரவேற்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. இது குறித்து பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் கலந்துரையாடலில் ஈடுபட்டது ஊக்கமளிக்கிறது. தமிழக மீனவர்களின் கவலையான எல்லை தாண்டி மீன்பிடிப்பு, கைது போன்ற பிரச்சனைகளை மனிதாபிமானம் மற்றும் அமைதியின் வழியில் தீர்வு காண வேண்டும் என்ற முடிவு மகிழ்ச்சியளிக்கிறது.

இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை அழித்துவிடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் இலங்கை அதிபர் பரிசீலிக்க வேண்டும். இலங்கை அதிபர் மற்றும் இந்திய பிரதமர் மேற்கொண்ட விவாதம் நம்பிக்கையை ஊட்டுகிறது. இந்த முடிவு எதிர்காலத்தில் இந்தியா - இலங்கை இடையே வலுவான உறவை ஏற்படுத்த போகிறது” எனக் குறிப்பிடிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.