மதுரை: சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் 20ஆம் ஆண்டு நினைவு ஸ்தூபி திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், சுந்தரேசன், விஸ்வநாதன், மகாதேவன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோரும், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.
#WATCH | Tamil Nadu: CJI DY Chandrachud inaugurates the vigentennial celebration on the completion of 20 years of establishment of Madurai bench of Madras High Court
— ANI (@ANI) July 20, 2024
At the event, he says, " i'm an advert believer of technology but just yesterday we got to witness the ill effects… pic.twitter.com/YYttT7J0cL
அப்போது, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் 20ஆம் ஆண்டு நினைவு ஸ்தூபியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு' என்ற பெயர் பலகையை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைத்தார். முன்னதாக 'மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளை' என இருந்த பெயர் தற்போது 'மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், விழாவில் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 200 இ-சேவா மையங்களும் திறக்கப்பட்டன. விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பேசுகையில், "ஔவையார், அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என குறிப்பிட்டுள்ளார்.
இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்லது. மதுரை தூங்காநகரம், 24 மணி நேரமும் விழித்துக் கொண்டு இருக்கும் நகரம் மதுரை. தமிழ் கலாச்சாரத்தின் நல்ல இயல்புகள் எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பவை. சென்னை உயர் நீதிமன்றம் ஆலமரம் போன்றது. நேற்று நாலடியாரின் ஆங்கில பதிப்பு எனக்கு கிடைத்தது. அதில் நம்பிக்கை குறித்து குறிப்பிடப்பட்ட விசயம் உண்மையானது. வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல உத்தரவுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் மதுரைக்கிளை அமைந்துள்ளது.
நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக வந்த போது, அந்தத்த மாநில மொழிகளில் உத்தரவுகளை அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் போது, அது சமூகத்தின் பிரச்னையை முன்னிறுத்தும் விதமாகவே அமைகிறது. மதுரைக்கிளை நீதியை மட்டுமல்ல, சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது.
தற்போது நீதிமன்ற விசாரணைகள் இ-கோர்ட், வீடியோ கான்பிரன்ஸ் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வழங்கப்பட்டு வருகிறது. மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. கடின உழைப்பு, தொழில் வழி முறைகளை கடைபிடித்து, தடைகளை உடைத்து இளம் வழக்கறிஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்.
இளம் வழக்கறிஞர்களுக்கு தொடக்கத்தில் தேவையான வாழ்வாதார நிதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உலகிலேயே ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முதல் பெண் வழக்கறிஞராக கண்ணகி செயல்பட்டுள்ளார்" என பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 20 வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு.. எழும்பூர் நீதிமன்ற வளாக மோதலுக்கு காரணம் என்ன?