ETV Bharat / state

'கிறிஸ்தவ சபைகளுக்கு அச்சுறுத்தல்'.. நீலகிரி ஆட்சியரிடம் கூட்டமைப்பு புகார் மனு! - NILGIRIS CHRISTIAN CHURCHES

கிறிஸ்தவ சபைகளுக்கு இந்துத்துவா அமைப்புகளின் மூலம் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தவர்களுக்கு தீர்வு காண வேண்டும் என நீலகிரி மாவட்ட கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட கிறிஸ்துவ கூட்டமைப்பு
நீலகிரி மாவட்ட கிறிஸ்துவ கூட்டமைப்பு (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 5:54 PM IST

உதகைமண்டலம்: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, நீலகிரி மாவட்ட கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர். சபையை நடத்த விடாமல் சில இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும், அதனால் கிறிஸ்தவர்கள் மன உளைச்சலில் இருப்பதாகவும் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த மனுவில், ''சிறுபான்மை மக்களாகிய கிறிஸ்தவர்கள் எல்லா மதத்தினரோடும் சகோதர உணர்வோடும், சமூக நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த சில காலங்களாக சில மதவாத அமைப்புகள் ஒன்றிணைந்து சிறுபான்மை கிறிஸ்துவ மக்களை தங்களுடைய வழிபாட்டு தளங்களை நடத்த விடாத படி இடையூறு செய்து வருகின்றனர். கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் கிறிஸ்தவ வழிபாடுகள் நடத்த விடாமல் தடுப்பதாகவும், இதனால் கிறிஸ்துவ மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: "ராமதாஸுக்கு வேற வேல இல்ல" - அதானி குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் ரியாக்ஷன்!

மேலும், இது குறித்து நீலகிரி மாவட்ட கிறிஸ்துவ கூட்டமைப்பு சார்பாக கோல்டன் கிராஸ் கூறுகையில், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் கடந்த சில நாட்களாக சிறுபான்மையான கிறிஸ்தவ மக்களுக்கு இந்துத்துவா அமைப்பின் மூலமாக மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆராதனைகளை தடை செய்வதற்கு விரோதமான முறையில் பேசுவதும், அவர்களின் மேல் வீணாக பொய் வழக்குகளை போட்டு அந்த போதகர்களை ஆராதனை செய்யவிடாமலும் தடை செய்து, அவர்களுக்கு மன உளைச்சல் உண்டாக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.

இதுபோன்ற அமைப்புகளின் செயல்பாடுகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் இடத்தில் விண்ணப்பம் அளித்து இதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கும்படியாக கேட்டுக்கொண்டோம். ஆட்சியர் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படியாக, நிர்வாகத்திடம் சொல்லி, காவல்துறையிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்'' என இவ்வாறு கூறினார்.

நீலகிரியில் கிறிஸ்தவ சபைகளுக்கு எதிராக சில இந்துத்துவா அமைப்புகள் நடந்து கொள்வதாக கூறி மாவட்ட கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.