சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொரில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஓசூரில் புதிய பன்னாட்டு விமானநிலையம் மற்றும் திருச்சியில் உலகம் தரம் வாய்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்புக்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் வரவேற்பு தெரிவித்தார்.
அப்போது பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், '' முதல்வரின் முகத்தைப் பார்த்தால் ஒரு பிரகாசமும் சிரிப்பும் தெரிகிறது.. ஆகையால் திருச்சியோடு சேர்த்து சேலத்திலும் ஒரு அறிவுசார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், சேலத்தில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர், '' சேலம் மாவட்டம் கலைஞருக்கு மிகவும் நெருக்கமான மாவட்டம் என்பதை நான் அறிவேன். ஆகையால் சேலத்திலும் அறிவுசார் மையம் அமைப்பதற்க்கான அறிவிப்பை அடுத்த நிதியாண்டில் நீங்கள் எதிர்பார்க்கலாம்'' என்று பதில் கூறினார்.
இதையும் படிங்க: "மத்திய அரசால் இந்த வருடம் ரூ.12,000 கோடி கூடுதல் செலவு" - நிதித்துறை அதிர்ச்சி தகவல்!