ETV Bharat / state

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்.. கிருஷ்ணகிரி விரையும் சிறப்புக்குழு! - Krishnagiri sexual abuse issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 2:14 PM IST

Updated : Aug 21, 2024, 5:15 PM IST

Krishnagiri school girl sexual abuse issue: கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை கிருஷ்ணகிரிக்கு சிறப்புக் குழுவினர் செல்லவுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப் படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கிருஷ்ணகிரி பாலியல் வழக்கை முழுமையாக விசாரணை நடத்த ஐஜி பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், என்சிசி திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட என்சிசி பயிற்சியாளர்கள் ஆறு பேரில், ஐந்து பேரும், இந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கூறிய போலியான என்சிசி பயிற்சியாளர்கள் இதே போன்று, மேலும் சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், ஐஜி பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றை அமைத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழு (Multi Disciplinary Team MDT) ஒன்றை அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்.

இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா மற்றும் சத்யா ராஜ் , காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு. 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் இன்று இரவு கிருஷ்ணகிரிக்குச் சென்று, மாவட்ட ஆட்சியருடன் நாளை ஆலோசனை செய்கின்றனர்.

இதையும் படிங்க: சிறுவர், சிறுமிகளுக்கு ஒரே அறை.. அரங்கேறிய பாலியல் அத்துமீறல்.! குமரி ஓட்டல் ஓனர் உட்பட 3 பேர் மீது போக்சோ!

Last Updated : Aug 21, 2024, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.