ETV Bharat / state

வடசென்னை வேட்புமனு தாக்கலில் பிரச்னை; தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்! - CEO Sathyabrata Sahoo

TN CEO of ECI Sathyabrata Sahoo Press Meet: வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

chief-electoral-officer-sathyabrata-sahoo-explains-about-problem-in-north-chennai-nomination
வடசென்னை வேட்புமனுவில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் என்ன?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 7:19 PM IST

சென்னை: சென்னை தி.நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது, நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் பதிவாகும் வாக்கு விகிதம் அதிக அளவில் வேறுபடுவதாகவும், அவற்றைக் களைய தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வருவதாகவும், இந்த முறை வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பிறப்பிடத்திலிருந்து பணி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் வேறு இடத்துக்குச் சென்றவர்கள் குறித்து கணக்கெடுத்து, இதுவரை 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், பறக்கும் படைகள் மூலம் பிடிபடும் தொகை உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால், அவை உரிய நடைமுறைகளோடு கைப்பற்றப்பட்டு கருவூலத்துக்கும், கூடுதல் தொகை பிடிபட்டால், அவை வருமான வரித்துறைக்கும் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட மூன்று கோடி ரூபாய் பிடிபட்டிருப்பதாகவும்ம் அவை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வாக்குப்பதிவு நாளன்று, ஊதியத்துடன் கூடிய விடுப்பு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்ற விதிமுறை தொழிலாளர் நலத்துறை ஆணையம் மூலம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவை அனைத்து நிறுவனங்களும் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், வடசென்னை தொகுதி வேட்பு மனுத் தாக்கலின்போது நேரிட்ட சம்பவம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நேற்று (மார்ச் 25) வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதிமுக பம்பரம் சின்னம் விவகாரம்; நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - MDMK Symbol Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.