ETV Bharat / state

"மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்க" - அசன் முகமது ஜின்னா கடிதம்! - Criminal cases bail - CRIMINAL CASES BAIL

Hasan Mohammed Jinnah Wrote a Letter To DGP: ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால், அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.

அசன் முகமது ஜின்னா புகைப்படம்
அசன் முகமது ஜின்னா புகைப்படம் (credit to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 4:31 PM IST

சென்னை: தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அசன் முகமது ஜின்னா தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்ய அரசு குற்றவியல் வழக்கறிஞரை அணுகி உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீசாரை அறிவுறுத்த வேண்டும்.

மேலும், குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும்போது நீதிமன்றங்கள் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறுபவர்கள் ஜாமீனை ரத்து செய்ய உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள போலீசாரை அறிவுறுத்த வேண்டும்.

சமூகத்தைப் பாதிக்கும் கடுமையான குற்றங்களில், உரிய காலக் கெடுவிற்குள் புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறுவதால் குற்றவாளிகள் எளிதில் ஜாமீன் பெற வழி வகைச் செய்கிறது. அதனை தடுத்திட, கடுமையான குற்ற வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி, புலன் விசாரணை செய்து உரிய காலக்கெடுவிற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதுடன், வழக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க போலீசாரை அறிவுறுத்த வேண்டும்.

மேலும், ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் சாட்சிகளை கலைப்பது, மிரட்டுவது போன்ற சட்ட விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பட்சத்தில், போலீசார் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்திய விவசாயிகள்.. காரணம் என்ன? - Farmers Protest In Thanjavur

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.