ETV Bharat / state

பெண் சடலத்தை சூட்கேஸுக்குள் வைத்து இழுத்து செல்லும் கொலையாளி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி - Chennai woman dead body in suitcase - CHENNAI WOMAN DEAD BODY IN SUITCASE

Chennai Woman Dead Body in Suitcase: சென்னை துரைப்பாக்கத்தில் கொலை செய்த பெண்ணின் உடலை சூட்கேசில் வைத்து கொலையாளி மணிகண்டன் இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் சடலம் சூட்கேசுக்குள் வைத்து இழுத்து செல்லப்படும் காட்சி
பெண் சடலம் சூட்கேசுக்குள் வைத்து இழுத்து செல்லப்படும் காட்சி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 7:56 PM IST

சென்னை: சென்னை துரைப்பாக்கம் பகுதியில் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்ணை சுத்தியால் அடித்து வெட்டி கொலை செய்து சூட்கேசில் வைத்து சாலையில் வீசி சென்ற சம்பவத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை நேற்று (செப்.20) போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து விசாரனை துரைப்பாக்கம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். அதில் முதல்கட்டமாக கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைபற்றிய நிலையில், அதன் அடிபடையில் மணிக்கண்டனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மணிகண்டன் தீபா உடலை சூட்கேசில் வைத்து கொண்டு சென்று சாலையில் வீசும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மணிகண்டன் சூட்கேசில் உடலை வைத்து சாலையில் இழுத்துக் கொண்டு செல்வதும், இரண்டு நிமிடத்தில் காலியிடத்தில் சூட்கேசை வீசிவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: மர்ம சூட்கேஸில் சிக்கிய 14 கிலோ கஞ்சா.. பரபரப்பான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்! -

இதற்கிடையே துரைப்பாக்கம் போலீசார் நடத்திய விசாரனையில் கடந்த 17ஆம் தேதி தீபாவை மணிகண்டன் வீட்டுக்கு அழைத்ததும், அன்று இரவு இருவருக்கும் பணம் தகராறு ஏற்படுத்தாகவும், அதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தீபாவை அடித்து கொலை செய்திருப்பதும் தெரியவந்ததுள்ளது.

மேலும் இரண்டு நாட்கள் தீபாவின் உடலை வீட்டிலேயே வைத்திருந்த நிலையில் நேற்று (செப்.20) காலை மணிகண்டன் தனது வீட்டுக்கு உறவினர்கள் வருவதை அறிந்து கொண்டு, 3000 ரூபாய் மதிப்புள்ள 6 அடி சூட் கேஸை புதிதாக வாங்கி, அதில் அதிகாலை 2 மணிக்கு தீபாவின் உடலை வைத்து தூக்கி வீசியதும் தெரியவந்துள்ளது .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.