ETV Bharat / state

மண் வாசம் வீசும் ஊரு எங்க ஊரு.. களைகட்டும் சென்னை செம்பொழில் கிராமத்து திருவிழா! - Chennai Village Festival - CHENNAI VILLAGE FESTIVAL

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் செம்பொழில் இயக்கம் சார்பில் "சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா" என்ற நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளது.

கிராமத்து திருவிழா நிகழ்ச்சிகள்
கிராமத்து திருவிழா நிகழ்ச்சிகள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 7:08 PM IST

சென்னை: சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் செம்பொழில் இயக்கம் சார்பில், "சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா" என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இந்த திருவிழா கடந்த செப். 27ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்றும் (செப்.28), நாளையும் (செப்.29) என மூன்று நாள் நடைபெறுகிறது.

பாரம்பரியம் பொங்கும் கிராமப்புற வாழ்க்கை: இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், தானிய வகைகள், விவசாயம் சார்ந்த புத்தகங்கள், மரங்களால் ஆன கைவினைப் பொருட்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டி, பானை அடித்தல், இளவட்டக்கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு கிராமத்தை கண் முன் காட்சிப்படுத்தும் விதமாக 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு நுழைவுக் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

கிராமத்து திருவிழா (Credits- ETV Bharat Tamil Nadu)

பண்பாட்டு விலங்குகள்: இங்கு காங்கேயம், புலிக்குளம், மலை மாடு, உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர் உள்ளிட்ட 20 வகையான நாட்டு மாடுகளும், கன்னி, சிப்பிப் பாறை, ராஜபாளையம் என 6 வகையான நாய்களும், மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, வெம்பூர் உள்ளிட்ட 13 வகையான ஆடுகள், மூன்று வகையான கோழிகள், அதேபோல மூன்று வகையான குதிரை உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமியக் கலையும், கலைஞர்களும்: மேலும் இங்கு தப்பாட்டம், சிலம்பாட்டம், அரிவாள் ஆட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சி குறித்து அங்கே ஸ்டால்கள் அமைத்துள்ள கிராமியக் கலைஞர்கள், பாரம்பரிய விவசாயிகள், மாடு வளர்ப்பவர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்கள் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசினர்.

இதில் பேசிய இசைக் கலைஞர் சவுண்ட் மணி கூறுகையில், "இந்த கண்காட்சியில் நாங்கள் 150 இசைக் கருவிகள் வைத்திருக்கிறோம். தற்போது மக்கள் அனைவரும் இங்கு வந்து, இந்த இசைக் கருவிகளை தொட்டுப் பார்த்தும், வாசித்தும் வருகின்றனர். இந்த கண்காட்சியின் மூலமாக நம் அடுத்த தலைமுறையினர் இசையை மருத்துவமாக எடுத்துச் செல்ல வேண்டும். சென்னையில் பாரம்பரியமாக வாசிக்கக்கூடிய சட்டி, மோளம் போன்ற இசைக்கருவிகள் அந்த அளவிற்கு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை" என்றார்.

மேலும் இது குறித்து பேசிய பார்வையாளர் ஜெயந்தி, "இந்த கிராமத்து திருவிழா குறித்து செய்தியில் பார்த்தேன். இங்கு கிராமத்தில் இருக்க கூடிய அனைத்து அமைப்புகளும் உள்ளன. இங்கே நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது கிராமத்திலேயே இருப்பது போல் உள்ளது. நான் புளியம்பட்டி என்னும் கிராமத்தில் தான் சிறுவயதில் வாழ்ந்தேன்.

இதையும் படிங்க: சென்னையில் ‘செம்பொழில்’ திருவிழா.. கார்த்தியின் முக்கிய ஆசை!

அங்கே நான் அனுபவித்து விளையாடிய அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வருகிறது. கிராமத்தில் இருக்கக்கூடிய நிம்மதி நகர வாழ்க்கையில் இல்லை. கிராமத்து வாழ்க்கை பற்றி எங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும் என அவர்களை இங்கு அழைத்து வந்தேன். என் குழந்தைகள் இதையெல்லாம் வியந்து பார்க்கின்றனர்" என தெரிவித்தார்.

இதையடுத்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாடு வளர்ப்பாளர் பாலபிரவீன் கூறுகையில், "சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்து வேலை செய்பவர்கள், தனது ஊரைப் பற்றி நினைத்து ஏங்கும் அனைவருக்கும் இந்தத் திருவிழா மகிழ்ச்சியை அளிக்கும், வாரத்தின் கடைசி நாட்களில் இங்கே வந்து திருவிழாவை கண்டுகளிக்கலாம்.

இங்கே காலையில் வந்தால் மாலை வரைக்கும் வீட்டிற்கு செல்வதற்கே மனசு வராது. இந்த மலை மாடுகள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கன்னியாகுமரி வரை உள்ளன, மலைகளிலும், காடுகளிலும் மேய்வதால் தான் இதற்கு மலை மாடுகள் என பெயர் வந்தது. ஆனால், அரசாங்கம் மாடுகள் மேய்வதற்கு அனுமதி இல்லை என்கிறது. மாடு இல்லை என்றால் விவசாயம் செய்ய முடியாது, விவசாயம் இல்லை என்றால் மனிதன் வாழ முடியாது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.