ETV Bharat / state

மார்பக புற்றுநோய் பாதிப்பு இவ்வளவா? தனியார் மருத்துவமனை இயக்குனர் ராஜா!

தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டால் மார்பக புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். வயதுக்கு வந்த பெண்கள் மாதமாதம் மார்பகங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என எம்ஜிஎம் புற்றுநோய் மருத்துவமனை மூத்த ஆலோசகர் ராஜா தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 9 hours ago

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபந்தயத்தை துவக்கி வைத்த அமைச்சர் நாசர்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபந்தயத்தை துவக்கி வைத்த அமைச்சர் நாசர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் (MGM) புற்றுநோய் நிறுவனம் சார்பில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக "Walk in Pink" நடைபந்தயம் இன்று (அக்.20) நடைபெற்றது.

நுங்கம்பாக்கம் எம்ஜிஎம் புற்றுநோய் நிறுவனத்தில் இருந்து, அண்ணா நகர் டவர் பார்க் வரை நடைபெற்ற நடைபயணத்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் பிங்க் நிற ஆடை அணிந்து கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து, அண்ணா நகர் டவர் பார்க்கில் ஜும்பா பயிற்சியும் (Zumba training) நடைபெற்றது.

இதையும் படிங்க: "நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது" - சீமான் பேச்சு!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து எம்ஜிஎம் புற்றுநோய் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், இயக்குனருமான ராஜா பேசியதாவது, “அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உலகில் 200 வகையான புற்றுநோய்கள் இருக்கிறது. அதில் 30 சதவீத மார்பக புற்றுநோய் பெண்களுக்கு வருகிறது.

இந்த வருடம் இந்தியாவில் ஜனவரி முதல் டிசம்பர் வரை 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எடைப்பருமன் புற்று நோய்க்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ரசாயன உணவை உட்கொள்ளாமல் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட வேண்டும். தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டால் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தலாம். வயதுக்கு வந்த பெண்கள் மாதமாதம் மார்பகங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.