ETV Bharat / state

அம்பத்தூரில் காணாமல் போனவர் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு! - PORUR LAKE DEATH CASE

PORUR LAKE DEATH CASE: இரண்டு நாட்களுக்கு முன் காணமல் போனதாக வழக்கு பதியபட்ட சென்னை தனியார் கூரியர் நிறுவன ஊழயரை, இன்று காலை போரூர் போலீசார் போரூர் ஏரியில் சடலமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூர் ஏரி, பாண்டியன்
போரூர் ஏரி, பாண்டியன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 4:51 PM IST

சென்னை: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான இருசக்கர வாகனம் ஒன்று இரண்டு நாட்களாக நின்று கொண்டிருப்பதாக, போரூர் போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து, போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, அம்பத்தூர் அடுத்த ஒரகடத்தைச் சேர்ந்த பாண்டியன் (37) என்பவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அவரை காணவில்லை என அவரது மனைவி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், போரூர் மேம்பாலத்தின் மேல் இருந்த வாகனம் பாண்டியன் ஓட்டி வந்த வாகனம் என விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, போரூர் மற்றும் அம்பத்தூர் போலீசார் சேர்ந்து பாண்டியன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று போரூர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக வந்த தகவலையடுத்து, போரூர் போலீசாரும், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

அப்போது போரூர் ஏரியில் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்ட போது, இறந்து கிடந்தது காணாமல் போன பாண்டியன் என்பது தெரியவந்தது. பின் பாண்டியன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாண்டியனுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்தவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தலைறைவாக இருந்த பிரபல ரவுடி சஜித் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.