சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வருபவர் சரவணன். இவர் தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வரை செல்லும் 55 எண் கொண்ட மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தாம்பரம் மாநகரப் போக்குவரத்துக் கழக செக்கிங் இன்ஸ்பெக்டர் முனுசாமி என்பவர், நடத்துநர் சரவணனுக்கு மெமோ கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர் சரவணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “இதுவரை நான் விடுமுறை எடுக்காமல் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு 350 லீவ் இருந்தும், அதையெல்லாம் எடுக்காமல் சிறந்த முறையில் பணியாற்றி வந்தேன். தாம்பரத்தில் சிறந்த நடத்துநர் எனச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (மே.1) மாநகரப் போக்குவரத்துக் கழக தாம்பரம் பணிமனை மேலாளர் பணிக்கு வரக் கூறியதால், 55 எண் கொண்ட மாநகரப் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்தேன். இந்நிலையில் மண்ணிவாக்கம் அருகே செக்கிங் இன்ஸ்பெக்டர் முனுசாமி என்னைத் தகாத வார்த்தையில் திட்டி, எந்த தவறும் செய்யாத எனக்கு மொமோ கொடுத்துள்ளார்” எனக் கூறி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்! - MLA Vanathi Srinivasan Statement