ETV Bharat / state

அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் குறைய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்! - REMAL Cyclone effects - REMAL CYCLONE EFFECTS

TN Weather Update: காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது எனவும், நாளை மறுநாள் கரையை கடக்கக் கூடும் எனவும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பாகவும், இயல்பை விட சற்று குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கோப்புபடம்
சென்னை வானிலை ஆய்வு மையம் கோப்புபடம் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 5:08 PM IST

சென்னை: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ): நாலுமுக்கு (திருநெல்வேலி) 10 செ.மீ மழையும், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 8 செ.மீ மழையும் , அடையாமடை (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ மழையும், கெத்தை (நீலகிரி) 5 செ.மீ மழையும், ஆயிக்குடி (தென்காசி) 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை திருத்தணியில் 37.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.0 டிகிரி செல்சியஸ் (-2.1 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.3 டிகிரி செல்சியஸ் (-1.9 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 31 டிகிரி – 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 18 டிகிரி – 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (மே.24) காலை 05:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச-கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ, தெற்கு - தென்மேற்கேயும் மற்றும் மேற்குவங்காள - கேன்னிங்லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது.

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று, நாளை(மே.25) காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக நாளை இரவு வலுப்பெற்று, நாளை மறுதினம் (மே.26) நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையைக் கடக்க கூடும். தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் இன்று(மே.24) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே.25 முதல் மே.30 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

மே.24 முதல் மே.28 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2 டிகிரி-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

மே.24: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும், இயல்பை விட சற்று குறையக்கூடும்.

மே.25: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

மே.26 முதல் மே.28 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28டிகிரி -29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
மே.24, 25 : குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே.26 முதல் மே.28 வரை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:
மே.24: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் வங்கக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே.25: மாலை வரை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென் வங்கக்கடல் பகுதிகள், இதர மத்தியகிழக்கு, மத்தியமேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே.26, 27: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு, மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே.28: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு, தென் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:
மே.24: தென்கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே.25: தென்கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆழ்க்கடல் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: ரீமால் புயல்: 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை! - REMAL STORM WARNING

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.