சென்னை: சென்னை விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலையில் தூய்மைப் பணியாளர்கள் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தமது வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸை தவறவிட்டுவிட்டதாகவும், குப்பை வண்டியில் அதனை தேடிப்பார்க்கும்படியும் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேற்பார்வையாளர் முன்னிலையில், கோடம்பாக்கம் மண்டலம் 137 வது வார்டு, பேட்டரி வாகன ஓட்டுநர் அந்தோணிசாமி அதனை தேடியபோது, குப்பைகளுக்கு இடையே வைர நெக்லஸ் மின்னியதை கண்டுபிடித்துள்ளார். பின்னர் அதனை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
தூய்மைப் பணியாளர் அந்தோணிசாமியின் நேர்மையை பாராட்டி, சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன், இன்று ரிப்பன் மாளிகைக்கு அவரை அழைத்து, சால்வை அணிவித்து கௌரவித்தார். மேலும், அவருக்கு ஊக்கத்தொகையையும் அளித்து பாராட்டினார். உர்பேசர் நிறுவன மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், திட்ட மேற்பார்வையாளர் குருசாமி, சட்டக்குழு தலைவர் சூரிய பிரபா ஆகியோர் உடனிருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பழனி உழவர் சந்தையில் கடைகளை ஒதுக்குவதில் முறைகேடு என குற்றச்சாட்டு; அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்!