ETV Bharat / state

பல்லாவரத்தில் பாலியல் தொழில்.. நாதக நிர்வாகி மீது விசிக புகார் - 2 நிமிட வாசிப்பில் சென்னை குற்றச் செய்திகள்! - chennai crime today

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 1:28 PM IST

சென்னையில் பல இடங்களில் நடந்த முக்கிய குற்ற நிகழ்வுகளை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பல்லாவரம் அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட அசாம் மாநில பெண்கள் மற்றும் இடை தரகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆன்லைனில் பாலியல் தொழில்: சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலையம் உட்பட்ட நல்லதம்பி பிரதான சாலையில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வணிக மையங்கள் அமைந்துள்ள கட்டடத்தின் மேல் மாடியில் போலீசார் சோதனை செய்த போது, அசாம் மாநில பெண்கள் 5 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரனையில், ஆன்லைன் மூலமாக அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும், இதற்கு இடைதரகராக செயல்பட்டு வந்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் (44) என்பவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அசாம் மாநில பெண்கள் 5 பேரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

நாதக நிர்வாகி மீது விசிக புகார்: சென்னை புளியந்தோப்பு சிவராஜ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (46). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 71வது எழும்பூர் தொகுதி வட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.‌ இந்நிலையில் இவர் நேற்று பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மி கல் என்ற யூடியூப் சேனலில் நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஐய்யனார் என்பவர் விசிக தலைவர் திருமாவளவனை கீழ்தரமான வார்த்தையால் திட்டியும், அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளதாகவும், இதனால் கட்சி தொண்டர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: செப்டம்பர் மாத இறுதிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க திட்டம்" - சென்னை மேயர் தகவல்!

இந்நிலையில், தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஐய்யனார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். இப்புகாரின் பேரில் பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌

வடமாநில தொழிலாளி மரணத்தில் பகீர் திருப்பம்: சென்னை சவுகார்பேட்டை ஹனுமந்தராயன் கோயில் தெருவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்மித் பாலாஜி பாபர் என்பவர் பரத் என்ற பெயரில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார்.

இவரது நகைப்பட்டறையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சைபுல் ரபீக் காஸி (31), வைபவ் அபாசாகேப் துருவ் (29), ராகேஷ் சூரியகாந்த் மாலி (29), மனோஜ் மாலிக் (31) ஆகியோர் பணியாற்றி கொண்டு அதே பட்டறையின் மூன்றாவது மாடியில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு யானைக்கவுனி போலீசாரை நகைப்பட்டறை உரிமையாளர் ஸ்மித் பாலாஜி பாபர் தொடர்பு கொண்டு தனது ஊழியர் சைபுல் ரபீக் காஸி தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சைபுல் ரபீக் உடலை மீட்டு சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நகைப்பட்டறை உரிமையாளர் ஸ்மித் பாலாஜி மற்றும் ஊழியர்கள் 3 பேரையும் யானைகவுனி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி நடத்தினர்.

அதில், நகை உருக்கும் பட்டறையில் நகை உருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக நகையை சுமார் 1 கிலோ 100 கிராம் வரை சைபுல் ரபீக் திருடியதாகவும், இதனால் உரிமையாளரான ஸ்மித், சைபுல் ரபீக்கை பட்டறையில் வைத்து கடந்த 8ஆம் தேதி இரவிலிருந்து கயிற்றால் கட்டி வைத்து கிரிக்கெட் மட்டையால் தாக்கியதும் தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சென்று பார்த்த போது சைபுல் ரபீக் தற்கொலை செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், உயிரிழந்த சைபுல் ரபீக்கின் தோள்பட்டை, முதுகு மற்றும் கழுத்து பகுதியில் கட்டையால் அடித்ததற்கான தழும்புகள் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் நகை பட்டறை உரிமையாளர் ஸ்மித் பாலாஜி, பட்டறையின் ஊழியர்களான வைபவ் அபாசாகேப் துருவ், ராகேஷ் சூரியகாந்த் மாலி, மனோஜ் மாலிக் ஆகியோரை பிடித்து யானைக்கவுனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.