ETV Bharat / state

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் உதவித்தொகை: பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - junior lawyers stipend

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 10:16 PM IST

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக் வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்  கவுன்சில் புகைப்படம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் புகைப்படம் (Image Credit: ETV Bharat Tamilnadu)

சென்னை: சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயும், பிற நகரங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் நல நிதிச் சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தும்படி உத்தரவிடக் கோரி புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஃபரிதா பேகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி குமரப்பன் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர்கள் நல நிதிய திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், புதுச்சேரி அரசு மற்றும் புதுச்சேரி – காரைக்கால் வழக்கறிஞர்கள் சங்கங்களுடன் இணைந்து கலந்தாலோசித்து கருத்துருக்களை இறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்க வேண்டும் என அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நான்கு வாரங்களில் சுற்றறிக்கை அனுப்ப, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பிற நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த உதவித்தொகையை எந்த பாரபட்சமும் காட்டாமல் வழங்கப்படவேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திரைப்பட பாடல்களுக்கு இளையராஜாவை போல் ஏ.ஆர்.ரகுமான் காப்புரிமை கேட்பதில்லை - நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.