சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையில் அக்கரை மற்றும் மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதில் கார், ஜீப், மூன்று சக்கர வாகனங்களுக்கு ஒரு ரூபாய் முதல் 68 ரூபாய் வரையிலும், இலகுரக வணிக வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.2 முதல் 110 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டணம்:
வாகன வகைகள் | ஒரு முறை பயணிக்க | ஒரு முறை சென்று பயணிக்க | ஒரு நாள் பல முறை பயணிக்க | 50 முறை செல்ல (90 நாட்களுக்கு) | மாதாந்திர அட்டை (30/31 நாட்களுக்கு) |
மூன்று சக்கரவாகனம், கார், ஜீப் | 48/- | 72/- | 131/- | 1589/- | 2789/- |
இலகுரக வணிக வாகனம்,இலகுரக சரக்கு வாகனம் | 77/- | 116/- | 212/- | 2567/- | 4505/- |
இரண்டு அச்சு சரக்கு வாகனம், பேருந்து | 161/- | 242/- | 444/- | 5379/- | 4505/- |
மூன்று அச்சு சரக்கு வாகனம் | 176/- | 264/- | 484/- | 5868/- | 10298/- |
பல அச்சு சரக்கு வாகனம் | 253/- | 380/- | 696/- | 8435/- | 14803/- |
கனரக கட்டுமான வாகனம், பல அச்சு வாகனம் | 308/- | 462/- | 847/- | 10268/- | 18021/- |
உள்ளூர் வணிக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணத்தைப் பொறுத்த வரையில் சரக்கு ஆட்டோ, டாக்சி, மேக்சி கேப் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 245 ரூபாயாகவும், இலகு ரக வணிக வாகனம், ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு 310 ரூபாயாகவும், டிரக்ஸ், பல அச்சு வாகனங்களுக்கு 970 ரூபாயாகவும், பள்ளி பேருந்துகளுக்கு 1,940 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதே போல் ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள மொத்தம் 64 சுங்கச்சாவடிகளில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாக்கப்பட்டது. முதற்கட்டமாக அரியலூர் மணகெதி, திருச்சி கல்லக்குடி, வேலூர் வல்லம், திருவண்ணாமலை இனம் கரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதே போல், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சுங்கச்சாவடியிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.இதன் மூலம் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் சராசரியாக ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு காலக்கெடு முடிந்த பேருந்துகளுக்கு தமிழக அரசு செக்!