ETV Bharat / state

மதுரையில் தடம் புரண்ட சென்னை - போடி விரைவு ரயில்..! தீபாவளி நாளில் பரபரப்பு..! - CHENNAI BODI EXPRESS DERAILED

சென்னையில் இருந்து மதுரை வழியாக போடி சென்ற அதிவிரைவு ரயில் பெட்டியின் சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

மதுரை சந்திப்பு
மதுரை சந்திப்பு (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 11:32 AM IST

Updated : Oct 31, 2024, 1:39 PM IST

மதுரை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் வரும் சென்னை - போடி அதிவிரைவு ரயில் இன்று காலை மதுரை சந்திப்பு வந்தடைந்த பிறகு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து போடிநாயக்கனூருக்கு விரைவு ரயில் (20601) ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையிலிருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு மறுநாட்களில் போடிநாயக்கனூர் சென்று சேரும். இந்நிலையில், இன்று இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது தடம் புரண்டது.

இந்நிலையில் விபத்து குறித்து மதுரை ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், புதன்கிழமை (அக். 30) இரவு சென்னையில் மின்சார இன்ஜினுடன் புறப்பட்ட சென்னை - போடி ரயில், வியாழக்கிழமை (அக். 31) காலை 7.10 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. போடி செல்வதற்காக இந்த ரயிலில் மின்சார இன்ஜின் கழற்றப்பட்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டது.

இதையும் படிங்க: ஆசிரியை திடீர் டிரான்ஸ்பர்.. பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்.. தேனியில் பரபரப்பு..!

பிறகு காலை 07.36 மணிக்கு மதுரை ரயில் நிலைய ஐந்தாவது நடைமேடையில் இருந்து ரயில் புறப்பட்டது. புறப்பட்ட உடனே இன்ஜினுக்கு அடுத்து இருந்த ரயில் மேலாளர் பகுதியுடன் இணைந்த இரண்டாம் வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கானபெட்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டது.

இதனால் இந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மதுரை ரயில் நிலையத்தில் வழக்கமான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை. தடம் புரண்ட ரயில் பெட்டி ரயிலில் இருந்து கழற்றப்பட்டு மற்ற ரயில் பெட்டிகளுடன் ரயில் 118 நிமிடங்கள் கால தாமதமாக காலை 9.28 மணிக்கு போடிநாயக்கனூருக்கு புறப்பட்டு சென்றது என மதுரை ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 31, 2024, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.