ETV Bharat / state

"சென்னை மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை" - வானிலை ஆய்வு மையம் தகவல்! - Tamil Nadu Weather Report

Tamil Nadu Weather Report: சென்னை மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain related file photo
மழை தொடர்பான கோப்பு படம் (Credits to ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 4:10 PM IST

சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழைப் பதிவாகியுள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: தென்காசி 12 முதல் 1 செ.மீ, கன்னியாகுமரி மற்றும் தேனி 8 முதல் 1 செ.மீ, மதுரை மற்றும் ராமநாதபுரம் 7 முதல் 3 செ.மீ, ஈரோடு 5 முதல் 1 செ.மீ, நீலகிரி 5 முதல் 2 செ.மீ, கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர் 4 முதல் 1 செ.மீ, திருவாரூர் 4 முதல் 3 செ.மீ, திருப்பூர் 3 முதல் 1 செ.மீ, சேலம், திருப்பத்தூர் மற்றும் புதுக்கோட்டை 2 முதல் 1 செ.மீ, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை 1 செ.மீ, கடலூர், தூத்துக்குடி மற்றும் நாமக்கல் 1 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும் இருந்தது. கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 40.8 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.5 டிகிரி செல்சியஸ் மற்றும் வேலூரில் 40.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 36 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 37.6 டிகிரி செல்சியஸ் (-0.8 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.8 டிகிரி செல்சியஸ் (-1.6 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

13.05.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர், மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

14.05.2024 மற்றும் 15.05.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16.05.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

17.05.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

18.05.2024 மற்றும் 19.05.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.05.2024 முதல் 17.05.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும்.

13.05.2024 முதல் 15.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ், இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 36 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

16.05.2024 மற்றும் 17.05.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பு நிலை மற்றும் இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 36 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: 13.05.2024 முதல் 17.05.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45 முதல் 55 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 60 முதல் 85 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 60 முதல் 85 சதவீதமாகவும் ஆகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமம் கட்டாயம்.. 3 நாட்களில் 2,300 பேர் உரிமம் பெற விண்ணப்பம்! - Pet License Application

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.