ETV Bharat / state

பனிக்கட்டிகள் இல்லை.. கெலவரப்பள்ளி அணையில் பொங்கிய ரசாயன நுரை - விவசாயிகள் அதிர்ச்சி! - Foam in kelavarapalli dam water

Foam in kelavarapalli dam water: கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து 570 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், மலை போல 50 அடி உயரத்திற்கு நுரை குவிந்து, முட்டைக்கோசு தோட்டம் முழுவதும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Foam in kelavarapalli dam water
கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயன நுரை (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 8:40 PM IST

Updated : May 13, 2024, 9:36 PM IST

கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயன நுரையின் காட்சி (credits - ETV Bharat Tamil Nadu)

கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் குவியல் குவியலாகப் பொங்கும், ரசாயன நுரைகளால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் மற்றும் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு நீர்வரத்து கணிசமான அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையின் மதகுகள் சரிசெய்யப்பட்டு வருவதால், அணைக்கு வரக்கூடிய நீர் தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 474கன அடி நீர் வரத்தாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து விநாடிக்கு 205 கன அடியாக இருந்துள்ளது. ஆனால், அணையிலிருந்து தென் பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 570 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்குப் பிறகு ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து ஓடுவது விவசாயிகளுக்கு ஆறுதல் என்றாலும், ஆற்று நீரில் கலக்கப்பட்ட அதிகப்படியான ரசாயன கழிவுநீரால் கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஆற்றங்கரையோரமாக உள்ள எல்லைப் பகுதிகளில் வெள்ளை பனி போர்த்தியது போல, மலைபோன்று குவியல் குவியலாக நுரைப்பொங்கி காட்சியளிக்கின்றனர். இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆற்றங்கரையோரமாக உள்ள விளைநிலங்களும் காற்றின் காரணமாக நுரை ஆக்கிரமித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையிலிருந்து சில மீட்டர் தூரத்தில் விளைநிலங்களில் 50 அடி உயரம் வரை தென்னைமரத்தை முழுவதும் மூடும் வகையில் நுரைப் பொங்கி மலையாகக் காட்சியளிக்கிறது.

அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறக்கப்படுவதால் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் பொங்கிச் செல்கிறது. மேலும், ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் விழுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அருகே 2 ஏக்கர் பரப்பளவிலான முட்டைக்கோசு தோட்டமும் நுரையால் மூடப்பட்டதால் பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தென் பெண்ணை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி" என சிறைக் காவலர் மிரட்டல்? - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு - Savukku Shankar

Last Updated : May 13, 2024, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.