ETV Bharat / state

கோவை அருகே வீட்டில் புகுந்து கோழியை வேட்டையாடிய சிறுத்தை.. வைரலாகும் வீடியோ - COIMBATORE LEOPARD - COIMBATORE LEOPARD

Leopard Hunts Hen: கோயம்புத்தூர் தடாகம் பகுதியில் வீட்டு சுற்றுச்சுவரில் நின்று கொண்டிருந்த கோழியை, சிறுத்தை கவ்வி பிடித்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, அதனை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை
சிறுத்தை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 2:57 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வப்போது யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், காட்டு மாடுகள் ஆகியவை வனப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வழக்கம்.

கோழியை வேட்டையாடிய சிறுத்தை (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக கோயம்புத்தூர் தடாகம் சாலை கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகர் மலைப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் தென்பட்டு வருகிறது. இரவு வேலைகள் மட்டுமின்றி பகல் வேலைகளிலும் சிறுத்தைகள் அடிக்கடி சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியிருந்தனர். கடந்த இரு மாதங்களுக்கு முன் கணுவாய் பகுதியில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறிய கருஞ்சிறுத்தை அங்கிருந்த ஆடுகளை வேட்டையாடியது.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த நிலையில் கோயம்புத்தூர் தடாகம் பகுதியில் வீட்டு சுற்றுச்சுவரில் நின்று கொண்டிருந்த கோழியை, சிறுத்தை கவ்வி பிடித்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருவள்ளுவர் நகர் பழனியப்பா லேஅவுட் பகுதியில் சக்திவேல் என்பவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்.

நேற்று இரவு கோழிகள் தொடர்ந்து சத்தமிட்டதால் சந்தேகம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு கோழி மாயமாகி இருந்ததும் சந்தேகப்படும்படியான தடங்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து கோழியை வேட்டையாடி விட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது தொடர்பாக உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்புகள் அதிகம் நிறைந்துள்ள இந்த பகுதியில் அருகே ஆங்காங்கே புதர்கள் தென்படுவதால், அதில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: யானை வழித்தடங்களில் மின் வயர்களின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பான வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - Elephants Path Issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.