ETV Bharat / state

நகைக்கடை உரிமையாளரை தாக்கிய அதிமுக பிரமுகர் தலைமையிலான கும்பல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - நகைக்கடை உரிமையாளர் தாக்குதல்

Vellore Jewelry shop owner: வேலூரில் அதிமுக மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேஷ் தலைமையிலான கும்பல், நகைக்கடை உரிமையாளர் ஆனந்தை தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகைக்கடை உரிமையாளரை தாக்கிய அதிமுக பிரமுகர் தலைமையிலான கும்பல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 3:14 PM IST

நகைக்கடை உரிமையாளரை தாக்கிய அதிமுக பிரமுகர் தலைமையிலான கும்பல்

வேலூர்: வேலூர் மாவட்டம் வேலூர் மெயின் பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் ஆனந்த் என்பவர், செண்பாக்கம் பகுதியில் நீச்சல் பயிற்சி குளம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிமுக மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேஷ் மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் அரவிந்த் ஆகியோர், ஓயாசிஸ் நீச்சல் குளம் பகுதியில் இவர்களுடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

பிறகு வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தின் சீட்டு கிழிக்கப்பட்டிருந்ததால், இது குறித்து அங்குள்ள வாட்ச்மேன் சீனிவாசனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் எங்களுடைய ஓனர்தான் இருசக்கர வாகனத்தின் சீட்டுகளை கிழித்தார் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் ஆனந்த், மற்றொரு அதிமுக பிரமுகர் டக்கர் ஜானகிராமன் ஆகியோர், மெயின் பஜாரில் உள்ள நகைக்கடைக்குச் சென்று, அதன் உரிமையாளர் ஆனந்த்-யிடம் ஏன் வாகனத்தின் சீட்டை கிழித்தாயென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆனந்தை அரவிந்த் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த ஆனந்த், இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்த், ராஜேஷ் மற்றும் டக்கர் ஜானகிராமன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனந்த் மீது தாக்குதல் நடத்திய அதிமுக மாநகர மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜேஷ் (31), நல்லதம்பி (46), கார்த்திகேயன் (50), அரவிந்த்சாமி (26), டக்கர் (எ) ஜானகிராமன் (48) ஆகியோரை வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அதிமுக மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேஷ் தலைமையிலான கும்பல் ஆனந்தை தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கோவையில் 6 வயது சிறுமி உயிரிழப்பு; பள்ளியில் கொடுக்கும் மாத்திரையை மேற்கோள் காட்டிய பெற்றோர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.