ETV Bharat / state

காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி! - YOUNG WOMAN ATTACKED IN MADURAI

மதுரையில் இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்க வற்புறுத்தி இளம் பெண்ணை கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காதலிக்க வற்புறுத்தி இளம் பெண்ணை தாக்கிய இளைஞர்
இளம் பெண்ணை தாக்கும் இளைஞர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 4:04 PM IST

மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது சக்கரா நகர். இங்குள்ள தனியார் ஜெராக்ஸ் கடையில் லாவண்யா என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் (25) என்பவர் பல நாட்களாக லாவண்யாவை தன்னை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு (நவ.17) அந்த ஜெராக்ஸ் கடைக்கு சென்று லாவண்யாவை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு சித்திக்கிடம், லாவண்யா மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சித்திக், லாவண்யாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

இளம் பெண் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த தாக்குதலில் நிலைகுலைந்த லாவண்யா மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளோர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் கணவன், குழந்தையை கொன்ற பெண்... ஐந்து ஆண்டுகள் கழித்து தண்டனை விதித்த நீதிமன்றம்!

மேலும், பாதிக்கப்பட்ட பெண் தற்போது நலமாக இருப்பதாகவும், தாக்கிய இளைஞர் தலைமறைவாகிவிட்டதால் அவரை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் சரமாரியாக தாக்கும் இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டும் அல்லாது, பட்டப் பகலில் இளம் பெண் தாக்கப்பட்ட இந்த சம்பவம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.