திருப்பத்தூர்: கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் அவருடைய மகன் சபரி ஆகியோர், காஞ்சிபுரத்துக்கு வைக்கோல் ஏற்ற ஈச்சர் லாரியில் தருமபுரியில் இருந்து வந்துள்ளார். அதேநேரம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து காலை 8 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று சுமார் 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தருமபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது.
இந்த நிலையில், தருமபுரி மேம்பாலத்தின் கீழ், திடீரென ஈச்சர் லாரியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சபரி, தேவராஜ், கணேசன், ஜமுனா, நாகராஜ், நவாப், சாகித், சக்கரை, பவானி, தாமோதரன்,வள்ளி, உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், ஈச்சர் லாரியில் வந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது, அதாவது தருமபுரி மேம்பாலத்தின் கீழ் சென்றுக் கொண்டு இருந்த தனியார் பேருந்து வளையும் போது எதிரே வந்து கொண்டு இருந்த
ஈச்சர்லாரி- பேருந்து மீது அதி பயங்கரமாக மோதுவது போல் அந்த சிசிடிவி காட்சி அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு மாத குழந்தையை கொன்று புதைத்த தாய்.. காவல் துறையிடம் நாடகம்.. அரியலூரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!