ETV Bharat / state

திருப்பூர் மக்களவைத் தொகுதியின் பிரதான கட்சி வேட்பாளர்கள் மனுத் தாக்கல்! - Tiruppur Constituency - TIRUPPUR CONSTITUENCY

Tiruppur Constituency: திருப்பூர் தொகுதியில் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 4 வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

4 major party candidates filed nomination on same day in tiruppur
திருப்பூரில் 4 முக்கிய கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 3:08 PM IST

திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அந்தந்த கட்சிகளின் சார்பில் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள், வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று திருப்பூர் தொகுதியில் அதிமுக, பாஜக, நாதக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 4 வேட்பாளர்களும், ஒரே நாளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன்: இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில், மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று இவர் திருப்பூர் குமரன் நினைவகத்தில், திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான கிறிஸ்துராஜிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பராயன், ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடக்கும் தேர்தலில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் அருணாச்சலம்: அதிமுக சார்பில், திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளராக ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் அருணாச்சலம் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இவர் நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆனந்தன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னதாக, அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர், எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, திருப்பூர் குமரன் சிலை மற்றும் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வேட்புமனுத் தாக்குதலுக்கு பின்னர் பேசிய அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அருணாச்சலம், தொகுதி மக்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தருவதாகவும், மக்களோடு இணைந்து பணியாற்றுவதாகவும் கூறினார். மேலும், மாற்று வேட்பாளராக அருணாச்சலத்தின் மனைவி தீபா, முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் முன்னிலையில் மனுத் தாக்கல் செய்தார்.

பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்: திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக, பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய இவர், திருப்பூர் குமரன் நினைவகத்தில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, வேட்புமனுத் தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தார். அப்போது, சட்டை அணியாமல் பனியன் அணிந்தபடி வந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், திருப்பூரின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், நூல் மற்றும் ஜமக்காளம் ஆகியவற்றை தட்டில் கொண்டு வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைத்து, தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த காலங்களில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மத்திய அரசுக்கும் புரிந்துணர்வு இல்லாததன் காரணமாக, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் எந்த ஒரு நலத்திட்டங்களும் செயல்படுத்த முடியாத நிலை இருந்ததாகவும், தான் வெற்றி பெற்றால் மக்களுக்கும் - மத்திய அரசுக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்பட முடியும் என்றும் கூறினார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி: திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று காலை திருப்பூர் குமரன் நினைவகத்தில், திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ்ஜிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர் பேசிய அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் சுப்பராயன், தொகுதிக்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனவும், தான் வெற்றி பெரும் பட்சத்தில், மண் சார்ந்த தொழில்களை பாதுகாக்கவும், நலிவடைந்த தொழில்களை மீட்டெடுக்கவும் குரல் கொடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி மார்க்கெட்டில் கண்ணீருடன் வந்த மூதாட்டிக்கு ரூ.2000 கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. நடந்தது என்ன? - MK Stalin

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.