சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தைத் தற்காலிகமாகத் தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மல்டி மாடல் இன்டகிரேஷன் (Multi Model Integration) என்ற போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காகத் தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. இதன்படி அடுத்த ஒரு சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
அதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கும். பிராட்வே பேருந்து நிலையம் இருந்த இடத்தில், 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.
குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது. இங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என்று அனைத்தையும் இனைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36வது முறையாக நீட்டிப்பு! - EX Minister Senthil Balaji Case