ETV Bharat / state

மும்பையில் துவங்கி லண்டன் வரை.. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் கடந்து வந்த பாதை! - who is judge kr shriram

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 12:22 PM IST

kr shriram judge profile in tamil: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பின்னணியை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப் படம்)
நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப் படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பிறந்தவர் கே.ஆர்.ஸ்ரீராம். இவரது முழு பெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை, கணக்கியல் மற்றும் எல்எல்பி ஆகியவற்றில் பி.காம் படித்தார்.

அதனை தொடர்ந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து எல்எல்எம் (கடல் சட்டம்) முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் 1986 ஆம் ஆண்டு ஜூலை 3ம் தேதி மகாராஷ்டிரா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். அப்போது மூத்த வழக்கறிஞராக இருந்த எஸ்.வெங்கிடேஸ்வரனின் சேம்பரில் கே.ஆர்.ஸ்ரீராம் இருந்துள்ளார்.

கே.ஆர்.ஸ்ரீராம் வழக்கறிஞராக, 1997 ஆம் ஆண்டு முதல் கப்பல் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டங்களில் தனி நிபுணத்துவதுடன் வணிக விவகாரங்களை கையாண்டு வந்துள்ளார். குறிப்பாக, துறைமுக சட்டங்கள், சுங்கச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், கடல் காப்பீடு, நிறுவன சட்டம் ஆகியவற்றிலான விஷயங்களை கையாளுவதில் நிபுணத்துவம் கொண்டிருந்தார் கே.ஆர்.ஸ்ரீராம்.

இந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். பின்னர் மூன்றே ஆண்டுகளில் 2016 இல் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார்.

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக இருந்து வந்த மூத்த நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்ததை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "தமிழக ஐடி துறையில் அதிக வேலைவாய்ப்புகள்" - அமைச்சர் பிடிஆர் கொடுத்த அப்டேட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.