ETV Bharat / state

"பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியேறினாலும் ஓட்டு விழாது" - திமுக எம்.பி கனிமொழி விளாசல்! - எம் பி கனிமொழி பேச்சு

MP Kanimozhi: தமிழக அரசு அதிக நிதி கொடுக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது எனவும் அதிமுக, பாஜக கட்சிகள் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டும் செய்து வருகின்றனர் என தூத்துக்குடி எம் பி கனிமொழி பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

எம் பி கனிமொழி பேச்சு
எம் பி கனிமொழி பேச்சு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 12:30 PM IST

எம் பி கனிமொழி பேச்சு

தூத்துக்குடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கடந்த மார்ச் 1ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், மார்ச் 2ம் தேதி முதல் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற முழக்கத்துடன் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழக பட்ஜெட் மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், நாஞ்சில் சம்பத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தில் எம்பி கனிமொழி பேசுகையில், ஜி.எஸ்.டி வரி வசூல் தமிழக பங்கீட்டு தொகையை ஒன்றிய அரசு தருவதில்லை.பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மிரட்டி ஜி.எஸ்.டி வரி வசூல் செய்து விட்டு பங்கு தொகையை தருவதில்லை. வரி கேட்ட வெள்ளையரை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை போல ஒன்றிய அரசினை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஒன்றிய அரசின் மக்களுக்கு எதிரான விரோத திட்டங்களை எதிர்த்து முதல்வர் கேள்வி கேட்டு வருகிறார்.கேள்வி கேட்டதற்காக தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்து வருகிறது ஒன்றிய அரசு.மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்; 8.20 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்!

தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் மழை வெள்ளை சேதங்களை பார்வையிட்ட பின்னர் கோயில் வளாகம் சகதியாக இருப்பதாக கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஏதும் கேட்கவில்லை. மோடி தற்போது தமிழகத்தில் தான் இருக்கிறார். தமிழகத்தில் மோடி குடியேறினாலும் பாஜகவிற்கு வாக்கு விழாது. அரசு விழா மேடையில் மோடி , திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எவ்வித திட்டங்களை நிறைவேற்றவில்லை , நாங்கள் தான் நிறைவேற்றி வருகிறோம் என்றார்.

தூத்துக்குடி துறைமுகம் வெளிப்புற விரிவாக்க பணிகளுக்கு, சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அது கிடப்பில் போடப்பட்டது. தற்போது தேர்தல் வரவுள்ளதால் தூத்துக்குடி மக்களை ஏமாற்ற நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தினை மோடி தொடங்கி வைத்துள்ளார்.

மோடி தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்த ரூ.15 லட்சத்தை தரவில்லை, ஆனால் தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்த மகளிர் உரிமைத் தொகையை வழங்கி விட்டார்.தமிழக அரசு அதிக நிதி கொடுக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.‌ அதிமுக, பாஜக கட்சிகள் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டும் செய்து வருகின்றனர். தமிழ் மொழி , தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசும் ஆளுநரை மத்திய அரசு தந்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: கோவை தனியார் பள்ளிக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.