ETV Bharat / state

"தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அண்ணாமலை வலியுறுத்தல்! - Drugs Smuggling

Jaffer Sadiq connection with Delhi drugs Smuggling: போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாகத் தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

bjp-tn-president-annamalai-k-on-jaffer-sadiq-connection-with-delhi-drugs-smuggling-issue
"தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 8:55 PM IST

சென்னை: போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத் தலைமையகம், டெல்லி காவல்துறையுடன் இணைந்து நடத்திய நடவடிக்கையில், சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் வலையமைப்பை முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில், பாசாய் தாராபூரில் உள்ள குடோனில் ஆய்வு செய்த போது 50 கிலோ சூடோபெட்ரின் மீட்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது.

டெல்லியில் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய கும்பலுடன் தமிழ் சினிமா தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான அ.ஜாபர் சாதிக் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.

இதனையடுத்து, திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது X வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், "டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டலத் துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவர், இந்தப் பணத்தை, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளதும், மேலும் போதைப் பொருள்கள் கடத்தல் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம், தமிழக அரசு நிவாரண நிதியாக வழங்கியுள்ள புகைப்படங்களும், அமைச்சர் சேகர்பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களும், மற்றொரு தேடப்படுபவரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டலத் துணைச் செயலாளர் முகமது சலீம் என்பவர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களிடம் கட்சி நிதி வழங்கியுள்ள புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும், தமிழ்த் திரைத் துறையில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், @BJP4Tamilnadu சார்பாக எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசைப் பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையிலிருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாகத் தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: துவாரகாவில் ஸ்கூபா டைவிங் செய்த பிரதமர் மோடி.. தெய்வீகமான அனுபவம் என பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.