திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் கடந்த 29ம் தேதி மர்ம நபர்களால் தெய்வசிகாமணி, அமலாத்தாள், செந்தில்குமார் ஆகிய 3 பேர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீசார் 14 பேர் கொண்ட தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஒரு துப்புகூட கிடைக்காததால் போலீசார் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை, கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் மனைவி கவிதா மற்றும் அவரது உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொங்கு பகுதியில் விவசாயம் சார்ந்த மக்கள் கடந்த 29ம் தேதி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளோம். தமிழக காவல் துறையோடு உள்ளோம்.
பாஜக சார்பில் அமித்ஷாவுக்கு கடிதம் எழுத உள்ளோம். அதில், இந்த வழக்கை காவல் துறையுடன் இணைந்து சிபிஐ விசாரிக்க வேண்டும். முதல்வரும் இதற்கு செவி சாய்க்க வேண்டும். ஏற்கனவே தோட்டத்தில் குடிக்க வேண்டாம் என சொன்னதற்கு 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இது முதலும், முடிவும் ஆக இருக்க வேண்டும்.
ஜனநாயகக் கட்டமைப்பில், அரசு இயந்திரங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க, திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைக்கவுண்டன்பாளையம் மூவர் படுகொலை வழக்கை, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.… pic.twitter.com/hqXubvTHaH
— K.Annamalai (@annamalai_k) December 6, 2024
போதைக் கலாச்சாரத்தை பார்த்து ஒரு தலைமுறை வளர்கிறது. இவர்கள் கையில் ஆயுதம் சென்றால் அது அபாயம். முதல்வரும் புரிந்து கொண்டு சிபிஐக்கு அனுமதி வழங்க வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போய்விடும்.
குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு தண்டனை விரைவாக வழங்கப்படவேண்டும். எல்லோருக்கும் பயம் வரும் அளவுக்கு ஆயுதம் எடுக்க நினைப்பவர்களுக்கு முதலும் முடிவுமாக இருக்க வேண்டும். சிறந்த அதிகாரிகளை வரவழைத்து விசாரணை செய்திருக்கலாம். நாங்களும் உங்களோடு வருகிறோம். சேர்ந்து தீர்வு காணுவோம்.
இதையும் படிங்க : "நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்" - திருச்சி எஸ்.பி வருண்குமார்!
கிராமப்பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். காவல் வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும். கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளனர். அதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் இங்கு ஏன் தரவில்லை. முதல்வர் உடனடியாக நிவராணம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்தில் எடுப்பார் என நினைக்கிறேன். கடமை அவருக்கு உள்ளது.
காவல் துறை மீது பழி போடுவதை விட சிஸ்டம் சரி இல்லை. போதிய வாகனம், உள்ளிட்ட வசதிகள் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சட்டம் - ஒழுங்கு failure ஆகி விட்டது. மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போகாமல் இருக்க தீர்வு வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 25 லட்சம் பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை முறையாக கண்காணிக்க வேண்டும். காவல் துறை எங்கே துப்பாக்கி எடுக்க வேண்டுமோ அங்கே எடுக்க வேண்டும். ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் எனது பேட்ஜ் மேட். சீமான் தமிழகத்தில் முக்கிய தலைவர். அதிகாரியின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
சீமான் அண்ணனை பொறுத்தவரை இதனை பெரிதுபடுத்த வேண்டாம். இது பாஜக கருத்து அல்ல. அரசியல் தலைவருக்கும், காவல் துறை அதிகாரிக்கும் சண்டை என கொள்ள வேண்டாம். அவ்வப்போது நாம் கண்ணாடி பார்க்க வேண்டாம்.
அரசியல் வந்த பிறகு அண்ணாமலை தன்னை திருத்திக் கொள்கிறார் என சொன்னால் அதை ஏற்கிறோம். தவறு என சொன்னாலும் அதனையும் ஏற்கிறேன். சீமான் எனது அண்ணன். புத்தக வெளியீட்டு விழா நடக்கட்டும். விஜய் பேசட்டும். அம்பேத்கர் கருத்தை கொண்டு செல்லும் ஒரே தலைவர் மோடி மட்டுமே" என பேசினார்.