ETV Bharat / state

அதிமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி தடா பெரியசாமி.. பாஜக மீதான அதிருப்திக்கு காரணம் என்ன? - thada periyasamy

Thada Periyasamy:பாஜக பட்டியல் சமூக அணியின் மாநில தலைவர் தடா பெரியசாமி திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துகொண்டார்.

தடா பெரியசாமி
தடா பெரியசாமி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 10:34 AM IST

Updated : Mar 30, 2024, 4:59 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பா.ஜ.கவில் விருப்பமனு அளித்திருந்த நிலையில் சீட் வழங்கப்படாததால் அதிர்ச்சியில் இருந்த பாஜக மாநில பட்டியல் சமூக அணித் தலைவர் தடா பெரியசாமி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தடா பெரியசாமி இன்று காலை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இனைத்து கொண்டார்.

அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தடா பெரியசாமி, "சிதம்பரம் தொகுதி என்பது தன்னுடைய தொகுதி அங்கு சம்பந்தமே இல்லாமல் வேலூரில் இருந்து ஒரு பெண்மணியை வேட்பாளராக நிறுத்தி உள்ளார்கள், பட்டியல் அணி மாநில தலைவராக உள்ள என்னிடம் ஏதும் கேட்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணமாக இருப்பது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தான் என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சிதம்பரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன், பாஜக பட்டியல் அணி மாநில தலைவருக்கு மரியாதை என்பது துளியளவு கூட இல்லை, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோர் திட்டமிட்டே தன்னை தவிர்த்து வருகின்றனர் என்றார்.

மேலும், "சிதம்பரம் தொகுதியில் என்னை கேட்காமல் கார்த்திகாயினி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமாவளவன் ஆதரவாக பாஜகவினர் செயல்பட்டு வருவதாகவும் ,திருமாவளவனுக்கு எதிராக அரசியல் செய்ததால் என் வீடு கூட அடித்து நொறுக்கப்பட்டது. சிதம்பரத்தில் நான் வேட்பாளராக களமிறங்கினால், திருமாவளவன் வெற்றி பெற முடியாது என்பதால் பாஜக தமிழக மாநில தலைமை தன்னை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டது. கட்சியில் இருக்கும் யாரையும் அண்ணாமலை மதிப்பதில்லை, பாஜக தமிழ்நாடு முழுவதும் நிச்சயம் தோல்வியை தழுவும்" என்று கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

பாஜக பட்டியல் சமூக அணியில் ஒரு முக்கிய முகமாக பார்க்கப்படும் தடா பெரியசாமி திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது சிதம்பரம் தொகுதியில் பாஜகவின் வெற்றிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி கேரண்டி கொடுத்தாரா?” - ராமதாஸ்-க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

Last Updated : Mar 30, 2024, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.