ETV Bharat / state

ஒரே நாடு ஒரே தேர்தல் என கருணாநிதியே சொல்லி இருக்கிறார்.. வானதி சீனிவாசன்!

BJP MLA Vanathi Srinivasan: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவைகளை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இவை தேவையற்றது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 1:03 PM IST

Updated : Feb 14, 2024, 6:56 PM IST

MLA Vanathi Srinivasan Byte

சென்னை: நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்றாவது நாள் அமர்வு இன்று (பிப்.14) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய வினாக்கள் விடை நேரத்திற்கு பிறகு பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கு உள்ள கவலைகளையும் அதில் உள்ள பிரச்னைகளையும் பாஜக புரிந்து கொள்கிறது. மக்கள் தொகை, காலநிலை மாற்றதிற்கு ஏற்ப ஒரே நாடு, ஒரே தேர்தலுக்குக்காக முன்னாள் குடியரசு தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்சிகளுக்கும் இது தொடர்பாக கருத்துக் கூற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஒரு சீர்திருத்தமாகப் பார்க்க வேண்டுமே தவிர, தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளைக் கொண்டு மற்றவர்களையும் குழப்பும் செயலில் ஈடுபடக்கூடாது என்றார். குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் இரண்டாம் பாகத்தில் கலைஞர் கருணாநிதி கூட ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆதரவானக் கருத்தை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் தேவையற்றது" எனவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?"- ஆளுநர் உரை குறித்து முரசொலி ரியாக்‌ஷன்!

Last Updated : Feb 14, 2024, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.