ETV Bharat / state

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்.. அணிவகுப்புக்கு அனுமதி கோரும் வானதி.. அமைதி காக்கும் காவல்துறை! - rss centenary year - RSS CENTENARY YEAR

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது திமுக அரசின் பாசிச முக்கத்தை காட்டுவதாக கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பாக வானதி சீனிவாசன்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பாக வானதி சீனிவாசன் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 5:47 PM IST

கோயம்புத்தூர்: அக்டோபர் 6ம் தேதி நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

அது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; 1925ம் ஆண்டு விஜயதசமி அன்று 'ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்' (ஆர்.எஸ்.எஸ்) தொடங்கப்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடப்பது வழக்கம்.

தமிழகத்தில் 1940களில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த திமுக அரசின் காவல்துறை அனுமதிக்கவில்லை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே, சர்வாதிகார ஆட்சியைப் போல பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர்களிடம் அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் விண்ணப்பித்துள்ளது.

இதையும் படிங்க: "பிள்ளைகளை படிக்க வையுங்க" - கடிதம் எழுதிவிட்டு காவலர் தற்கொலை.. கோயம்பேடு பகீர் சம்பவம்!

இதுவரை எந்த பதிலையும் தராமல் காவல்துறை இழுத்தடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. அதுபோல இந்த ஆண்டும் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடக்கும்போது, தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது திமுக அரசின் பாசிச தன்மையையே காட்டுகிறது.

இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா ஆண்டு. உலக வரலாற்றில் துவங்கிய நாளில் இருந்து எந்த பிளவையும் சந்திக்காமல் தொடர்ந்து 100 ஆண்டுகள் மக்களின் நன்மதிப்பை பெற்று வெற்றிகரமாக செயல்படும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர்கள். அந்த அமைப்பால் ஊக்கம் பெற்று இந்த நிலையை அடைந்தவர்கள். நாட்டை வழிநடத்தியவர்களும், இப்போது வழிநடத்துபவர்களும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பால் வளர்ந்தவர்கள்.

குறுகிய எண்ணத்துடன் நூற்றாண்டு காணும் இயக்கத்தின் அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது. எனவே, அக்டோபர் 6ம் தேதி நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.