திருநெல்வேலி: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
அந்த வகையில், இன்று(ஏப்.13) நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு வீதி வீதியாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது குன்னத்தூர் கிராமத்தில் வாக்கு சேகரித்த போது அங்கு ஏராளமான பெண்கள் மற்றும் மூதாட்டிகள் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வரவேற்கத் திரண்டனர்.
இந்நிலையில் அங்குக் கூடியிருந்த மக்களிடம் நயினார் நாகேந்திரன் வணக்கம் வைத்தபடி தனக்குத் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது மூதாட்டி ஒருவர் நயினார் நாகேந்திரனைப் பார்த்து தான் ஏற்கனவே வாக்களித்து விட்டேன் என்பதை உணர்த்தும் வகையில், நாசுக்காக ஆள்காட்டி விரலை உயர்த்தி காட்டினார்.
முன்னதாக, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு செலுத்தத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த மூதாட்டி வடிவேலு பட பாணியில் உங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேன் எனச் சிரித்துக் கொண்டே கூறினார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் சிரித்தனர். அதன்பின்னர், வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மூதாட்டியின் காதுக்கு அருகில் சென்று யாருக்கு வாக்களித்தார் என்பதைத் தெரிந்து கொண்டார்.
பின்னர், மூதாட்டி தனக்குத் தான் வாக்களித்திருப்பார் என்ற மகிழ்ச்சியில் அவரை ஆரத்தழுவிக் கட்டி அணைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: "மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு"- ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி! - Lok Sabha Election 2024