ETV Bharat / state

வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. திமுக - பாஜக மாறி மாறி புகார்.. நெல்லையில் பரபரப்பு! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 4:46 PM IST

Petition to Disqualify Congress Candidate: நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யுமாறு திமுகவும், காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யுமாறு பாஜகவும், மாறி மாறி புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Petition to Disqualify Congress Candidate
காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய மனு

திருநெல்வேலி: நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், நெல்லையில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை இணைந்து நடத்திய சோதனையில், பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நெல்லையைச் சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரரான ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில், தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக உறுப்பினர் உள்பட 3 பேரிடம் சுமார் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபர்களிடம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டது.

இதன் காரணமாக, நெல்லை தேர்தல் களம் பரபரப்பான நிலையில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நேற்று நெல்லை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் சோனாலி பொன்ஷே வயங்கங்கரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பதிலுக்கு நெல்லை காங்கிரஸ் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அணி மற்றும் இந்து முன்னணி சார்பில் இன்று (திங்கட்கிழமை) மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் கூறுகையில், “நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில், சமீபத்தில் தான் பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த விவரத்தை, இதுவரை மாவட்டத் தேர்தல் அலுவலகம் வெளியிடவில்லை. சிலர் 30 லட்சம் எனவும், சிலர் மூன்று கோடி, 30 கோடி என்றும் கூறுகின்றனர்.

ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு எவ்வளவு, யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, யார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை இதுவரை தேர்தல் அலுவலகம் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காகவே, தற்போது பாஜக வேட்பாளரின் ஆதரவாளர்களிடம் சோதனை நடத்துகிறார்கள். அவர்கள் செலவிற்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து மிரட்டுகிறார்கள்.

மாவட்ட திமுக அலுவலகத்தில் பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் நெல்லை காங்கிரஸ் வேட்பாளரின் தேர்தல் செலவுக்காகவும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவும் வைத்திருந்திருக்கலாம். எனவே, நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

நெல்லையில் ஏற்கனவே நயினார் நாகேந்திரன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வரும் நிலையில், பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு அளித்திருப்பது, மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு; சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்! - Sattai Duraimurugan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.