ETV Bharat / state

பிரியாணி மேன் யூடியூபர் அபிஷேக் கைது.. காரணம் இதுவா? - biriyani man youtuber arrest - BIRIYANI MAN YOUTUBER ARREST

Youtuber Biriyani Man Arrest: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான கானொளியை யூடியூபில் பதிவிட்டதால் பிரியாணி மேன் யூடியூப் சேனல் உரிமையாளர் அபிஷேக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யூடியூபர் அபிஷேக்
கைது செய்யப்பட்ட யூடியூபர் அபிஷேக் (Credits - Biriyani man youtube page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 3:34 PM IST

Updated : Jul 31, 2024, 3:04 PM IST

சென்னை: சென்னை தெற்கு மண்டலம் கணினி சார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், நான் தினம்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் மொழி சைகைகளை வீடியோவாக பதிவு செய்து அந்த காணொளியை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ள பிரியாணி மேன் என்ற யூடிப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கூறி இருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தெற்கு மண்டலம் கணினிசார் காவல் நிலையத்தில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS), தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் பிரியாணி மேன் யூடியூப் சேனல் உரிமையாளர் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை செய்து வந்த தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் அபிஷேக்கை நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நேரலையில் தற்கொலை முயற்சி.. கைது செய்யப்படுவாரா பிரியாணி மேன்?

Last Updated : Jul 31, 2024, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.