ETV Bharat / state

இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் நினைவிடம் நடுவே பவதாரிணியின் உடல் அடக்கம்: கூடலூர் அருகே ஏற்பாடுகள்! - பவதாரிணியின் உடல் தேனியில் அடக்கம்

Bhavatharini: மறைந்த பிரபல பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் சமாதிக்கு நடுவில் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Etv Bharat
இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் சமாதிக்கு நடுவே மகளை அடக்கம் செய்ய ஏற்பாடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 10:17 AM IST

Updated : Jan 27, 2024, 11:07 AM IST

இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் சமாதிக்கு நடுவே மகளை அடக்கம் செய்ய ஏற்பாடு

தேனி: இசைஞானி இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜன.25) பவதாரிணி சிகிச்சை பலனின்றி காலமானார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் நேற்று (ஜன.26) மாலை கொண்டுவரப்பட்டு, தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் பவதாரிணியின் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் உயிரிழந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதற்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள இளையராஜா பண்ணை வீட்டிற்கு இன்னும் சற்று நேரத்தில் பவதாரிணியின் உடல் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து, அங்கிருந்து பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உயிரிழந்த இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவா என இருவரது உடலும் இதே பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இவர்கள் இருவர் சமாதிக்கு நடுவில், மகள் பவதாரிணியின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இளையராஜாவின் குடும்ப உறுப்பினர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் லோயர் கேம்பில் உள்ள பண்ணை வீட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பவதாரிணி இறப்பிற்கு "அன்பு மகளே" என பதிவிட்டு இளையராஜா உருக்கம்.. பிரபலங்கள் நேரில் அஞ்சலி..!

Last Updated : Jan 27, 2024, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.