ETV Bharat / state

தேயிலைத் தோட்டத்தில் புகுந்த கரடி.. தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்! - Bear in Kothagiri Estate - BEAR IN KOTHAGIRI ESTATE

COONOOR BEAR PROBLEM: குன்னூர், கோத்தகிரி பகுதியில் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த கரடியால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், கரடியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஊருக்குள் புகுந்த கரடி
ஊருக்குள் புகுந்த கரடி (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 5:12 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. அவ்வாறு வரும் கரடிகள் மனிதர்களைத் தாக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், குன்னூர் வசந்தம் நகர் பகுதியில் பகல் நேரத்தில் ஒரு கரடி உலா வருவதை நேரில் கண்ட குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

குன்னூர், கோத்தகிரி பகுதியில் கரடிகளின் அட்டகாசம் (VIDEO CREDITS- ETV Bharat Tamil Nadu)

காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய இந்த கரடி, இன்று பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அந்த தேயிலைத் தோட்டத்தில் அமர்ந்து இரண்டு மணி நேரமாக கரடி ஓய்வுயெடுத்ததை பார்த்த தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பின்னர், உடனடியாக அங்கிருந்து வெளியேறிய தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், இது குறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கரடி இருக்கும் பகுதிக்கு வந்த வனத்துறையினர், கரடியின் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரடியை விரைவில் கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர். இந்த கரடியின் நடமாட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய வசந்தம் நகர் குடியிருப்புவாசியான பிரியா, “பகல் பொழுதுகளில் கரடிகள் வீட்டுக்கு வருகின்றன. கரடிக்கு பயந்து குழந்தைகளை வெளியில் விளையாடவோ, ஏன் பள்ளிக்குக் கூட தனியாக அனுப்ப அச்சமாக இருக்கிறது. இவ்வாறு கரடி வழித்தடங்களில் வந்து நின்றகொள்வதனால் ஊர்மக்கள் வேலைக்கோ, பள்ளிக்கோ செல்வது சிரமமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஊருக்குள் எந்த பொருள்களை கையில் எடுத்துச் சென்றாலும் இந்த கரடிகள் ஏதாவது செய்துவிடுமோ என்ற பயமும் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: செல்போன் திருடியவரை விரட்டிப் பிடித்த சிங்கம் போலீஸ்.. வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.