ETV Bharat / state

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பட சம்பள விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை... வழக்கை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்! - ACTOR ARAVINDH SWAMI SALARY CASE

ACTOR ARAVINDH SWAMI: பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட சம்பள பாக்கி பிரச்னை தொடர்பாக பட தயாரிப்பாளர் முருகன் குமார் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அணுகியுள்ளதாக நடிகர் அரவிந்த்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 11:02 PM IST

சென்னை  உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (CREDITS - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளியானது. ஒப்பந்தப்படி தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 30 லட்சம் ரூபாயை வழங்கவில்லை எனவும், 27 லட்சம் ரூபாய் டி.டி.எஸ். வரி செலுத்தப்படவில்லை எனவும், பட வெளியீட்டுக்காக பெற்ற 35 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தரவில்லை எனவும் கூறி, பட தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக, நடிகர் அரவிந்த் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மொத்தமாக 65 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் நடிகர் அரவிந்த் சாமிக்கு வழங்க வேண்டும் எனவும், 27 லட்சம் ரூபாய் டி.டி.எஸ். வரியை வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டும். எனவும், கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தொகையை தயாரிப்பாளர் வழங்காததால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரி நடிகர் அரவிந்த் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது.சொத்து விவரங்களை காலதாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூலை 8) நீதிபதி வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த்சாமி தரப்பில், இந்த பிரச்னையில் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதால், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல.. நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்! -

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.