ETV Bharat / state

டாஸ்மாக்கில் எதிரே அமர்ந்து மது அருந்தியவரின் மண்டையை உடைத்த நபர் கைது! - Valasaravakkam TASMAC incident - VALASARAVAKKAM TASMAC INCIDENT

Valasaravakkam TASMAC incident: வளசரவாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரது மண்டையை மதுபாட்டிலால் உடைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை
சென்னை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 10:14 PM IST

சென்னை: சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில், பாகேஷ் குமார் (37) என்பவர் நேற்று (ஏப்.22) இரவு மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே அமர்ந்து மது அருந்திய மற்றொரு நபர், பாகேஷ் குமாரின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் பாகேஷ் குமாரை, எதிரே இருந்த நபர் பீர் பாட்டிலைக் கொண்டு பயங்கரமாக தலையில் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பாகேஷ் குமார் சரிந்து விழுந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளசரவாக்கம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த பாகேஷ் குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர மேற்கொண்ட விசாரணையில், அவரைத் தாக்கியது வளசரவாக்கம் பெத்தாண்யா நகர் பகுதியைச் சேர்ந்த முத்துஜா அகமது (26) என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அந்த நபரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டாஸ்மாக்கில் மது அருந்திய நபர் பீர் பாட்டிலால் எதிரே அமர்ந்திருந்த நமரின் தலையில் பீர் பாட்டிலால் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சக தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! - Life Imprisonment

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.