ETV Bharat / state

" 'கோட்' பட ரிலீசுக்காக பேசுகிறார் விஜய்..உதயநிதி ஏதும் சொன்னாரா?" - அர்ஜுன் சம்பத் - Arjun Sampath Criticized Vijay

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 9:23 AM IST

Arjun Sampath: திமுகவின் ஊதுகுழலாக ஜோசப் விஜய் மாறியுள்ளார் என்றும் இன்னொரு மக்கள் நீதி மய்யமாக, தமிழக வெற்றிக் கழகம் மாறிவிட்டது என்றும் அக்கட்சியில் தலைவர் விஜய்யை இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கடுமையாக சாடியுள்ளார்.

அர்ஜுன் சம்பத் மற்றும் விஜய்
அர்ஜுன் சம்பத் மற்றும் விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூருக்கு இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று (ஜூலை 3) வருகை தந்திருந்தார். அப்போது அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார்.

திமுகவிற்கு பிரச்சாரம் செய்யும் தவெக தலைவர் விஜய்: அப்போது பேசிய அர்ஜுன் சம்பத், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் வரிசையில் இணைந்து விட்டார். கமல்ஹாசன் ஒரு காலத்தில் டார்ச் லைட்யை வைத்துக்கொண்டு வாரிசு அரசியல் மற்றும் ஊழல் அரசியலை எதிர்க்கும் மக்கள் நீதி மய்யம் என்று டிவியை உடைத்தார். அதன் பிறகு தற்போது மக்கள் நீதி மையத்தின் சார்பாக திமுகவுடன் கூட்டணி அமைத்து, திமுகவிற்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதேபோல, ஜோசப் விஜய் கடந்த முறை பேசியபோது, போதைப் பொருட்களை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கும் அதில் கடமை இருக்கிறது என்று பேசினார். பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனப் போதைப் பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அறிவுரைகள் வழங்கினார்.

விஜயின் பேச்சுக்கு பின்னால் உதயநிதி: அடுத்து அவருடைய கோட் (GOAT) படம் ரிலீஸ் ஆகவேண்டும். உதயநிதி ஏதாவது சொன்னாரா? என்று தெரியவில்லை. அதனால், நேற்றிலிருந்து திமுகவின் ஊதுகுழலாக ஜோசப் விஜய் மாறியுள்ளார். மேலும், கல்வி பொது பட்டியலில் இருக்கக் கூடாது, மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று விஜய் கூறுகிறார்.

ஆனால், இன்று இருக்கக்கூடிய கல்விக் கொள்கை, தாய்மொழி கல்விக் கொள்கை. இந்த தமிழக அரசு தாக்கல் செய்திருப்பது ஆங்கில திணிப்பு கல்விக் கொள்கை. மேலும், விஜய் 3 விஷயங்களைக் கூறி நீட் தேர்வு வேண்டாம் என்று பேசுகிறார்.

தாய்மொழி கல்விக்கொள்கையில் 'ஆங்கிலம்': அதேபோல, திமுகவினர் கூறுவதை போல விஜய்யும், இந்தியாவை ஒன்றியம் என்று பேசுகிறார். திமுக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்துப் பேசுகிறார். அதனால், இன்னொரு மக்கள் நீதி மய்யமாக, தமிழக வெற்றிக் கழகம் மாறிவிட்டது.

பிரிவினைவாதம் செய்யும் தவெக தலைவர் விஜய் - அர்ஜுன் சம்பந்த்: ஜோசப் விஜய் கொஞ்சம் இளைஞர் சக்திகளை வைத்து அரசியலுக்கு வந்துள்ளார். மக்கள் மத்தியில் போதைப் பொருள்கள், லஞ்ச ஒழிப்பு ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு படிக்கும் மாணவர்கள் இடையே இந்தியா ஒரு நாடல்ல; இந்தியா ஒன்றியம் என்று பேசி பிரிவினையை ஏற்படுத்துகிறார்.

திமுக துணையோடு தமிழ்நாடு மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அர்ஜுன் சம்பத் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதையும் படிங்க: ஜூலை 8-ல் கூட்டம்.. நெல்லை மேயர் ராஜினாமா பின்னணி என்ன? முன்னாள் மாவட்டச் செயலாளரின் சூழ்ச்சியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.