ETV Bharat / state

சிஏஏ சட்டத்தின் கீழ் இஸ்லாமியர் ஒருவர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு - அர்ஜுன் சம்பத்!

Arjun Sampath CAA: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் கூட ரூ.1 கோடி பரிசளிக்கத் தயாராக உள்ளோம் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 9:07 PM IST

CAA
CAA
சிஏஏ சட்டத்தின் கீழ் இஸ்லாமியர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு - அர்ஜுன் சம்பத்!

வேலூர்: இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிகப்படியான தொகுதிகளைக் கைப்பற்றி, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைக்க வேண்டும் என வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இன்று(மார்ச்.12) செங்கோல் வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு முன்பு ஆதரவாக வாக்களித்துவிட்டு தற்போது வரலாற்றுப் பிழை என்று எதிராகப் பேசுகிறார். இது திராவிடக் கலாச்சாரம். இதனை முறியடிக்க வேண்டும்.

அரசுப் பணத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குப் பேனா, கருணாநிதிக்கு சிலை திறக்கின்றனர். ஆனால், தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியாஞ்சலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்து விரோத அரசாகத் தமிழக அரசு செயல்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு அலை தமிழகத்தில் வீசுகிறது. இந்த அலை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக முதலமைச்சர் குடியுரிமை திருத்தச் சட்டம் பிரிவினையை உருவாக்கும் என கூறுகிறார். இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒருவராவது பாதிக்கப்பட்டு, குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதா என்பதை மக்கள் உணர வேண்டும்.

திட்டமிட்டு இஸ்லாமிய மக்களை ஏமாற்ற திமுக வதந்திகளைக் கூறுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப் பட்டதாக நிரூபித்தால் கூட ரூ.1 கோடி பரிசளிக்கத் தயாராக உள்ளோம். சாதி மதப் பிரிவினைச் செய்து தேர்தலை எதிர்கொள்ளக் கூடாது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கதிர்ஆனந்த் கடந்த தேர்தலில் வெற்றி பெற அதிகளவில் பண விநியோகம் செய்தார். இம்முறை கனிமவளக் கொள்ளை மூலம் வைத்துள்ள ரூ.60 ஆயிரம் கோடியைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக கூட்டணி எம்பிக்கள் 38 பேரும் கடந்த 5 ஆண்டுகளும் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் பேசுவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருந்தனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏதும் பேசவில்லை. தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 2 லட்சம் தொண்டர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர் என்றார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் தூத்துக்குடி.. தேர்தல் பணிக்காக 10,000 பணியாளர்கள் பட்டியல் தயார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.