அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளச்சாராயம், கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட விவகாரத்தில் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கள்ளச்சாராயம், கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை, அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அறிபவர்கள் காவல் துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கம்படி தெரிவித்து, அதற்கான தொடர்பு எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை பொது மக்கள் 94896 - 46744 என்ற செல்போன் எண்ணிற்கு அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும், இது சம்பந்தமாக தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம்; கடல் விளையாட்டு தொடர்பான அறிவிப்புகள் என்ன?