சென்னை: இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், சில நகரங்கள் மட்டும், தங்கள் சுத்தமான காற்றின் தரத்தால் மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளன. டெல்லி மற்றும் பிற பெருநகரங்கள் அபாயகரமான அளவு காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் அதே வேளையில், சில நகரங்கள் சாதகமான புவியியல் அமைப்பு மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் கொள்கைகள் வாயிலாக குறைந்த காற்று மாசு குறியீடு (AQI) அளவுகளை பராமரித்து வருகின்றன.
இந்தப் பட்டியலில், நவம்பர் 11 நிலவரப்படி, தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், 25 எனும் காற்று மாசு குறியீடு அளவுடன் முதன்மையானதாக இருந்தது. இது இந்தியாவின் மிகக் குறைந்த காற்று மாசுக் குறியீடு அளவுகளில் ஒன்றாகும். அரியலூரின் கடலோரப் பகுதிகள் மற்றும் பசுமையான சூழல் இந்த சாதனைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி இருக்கின்றன. புவியியல் அம்சங்கள் காற்றின் தரத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
இதேபோல், சிலோங் (மேகாலயா), ஐஸ்வால் (மிசோரம்) போன்ற பிற தென்னிந்திய நகரங்களும் சுமார் 25 காற்று மாசு அளவுகளைப் பதிவு செய்து தங்கள் சூழலின் சிறப்பை பிரதிபலித்துள்ளன. இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் குறைந்த தொழிற்சாலை கார்பன் உமிழ்வுகள் காரணமாக மிசோரமில் உள்ள ஐஸ்வால் 32 அளவுடன் தங்களின் சுத்தமான காற்றின் நிலையை வெளிப்படுத்தியுள்ளது.
சிக்கிமில் உள்ள கங்டோக் மற்றும் அசாமில் உள்ள நாகோன் ஆகியவை இடங்கள் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. பசுமைப் போர்வை போர்த்தி இருக்கும் பல இடங்கள் மோசமான காற்றின் தரத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், இந்த இரண்டு இடங்களும் குறைந்த மாசுபாட்டு அளவை கொண்டுள்ளதாக காற்று மாசுக் குறியீடுகள் எடுத்துக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க |
இதற்கிடையில், கர்நாடகாவில் உள்ள மடிகேரி, சுமார் 50 AQI அளவுகளைக் கொண்டுள்ளது. மலை நகரங்கள் எவ்வாறு சிறந்த காற்றின் தரத்தைத் தக்கவைக்க முடியும் என்பதை இந்த அளவுகோல்கள் சிறப்பாக விளக்கியுள்ளது. இந்த சூழலில், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் கடுமையான கார்பன் உமிழ்வு விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் வாயிலாகவும், பசுமையான இடங்களை மேம்படுத்துவதன் மூலமும் பயனடையலாம் என இயற்கை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
நகரமயமாக்கல் வேகமாக முன்னேறி வரும் நிலையில், காற்று மாசும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை நாம் சமீபகாலமாக பல வழிகளில் பார்த்து வருகிறோம். இவற்றைத் தடுக்க போர்கால அடிப்படையில் திட்டங்கள் தேவை என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.