ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயில் கட்டிடம் பாதுகாப்பாக உள்ளதா? தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு! - thanjavur temple inspection - THANJAVUR TEMPLE INSPECTION

Thanjavur Periya kovil: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள இடிதாங்கி உரிய சிரத்தன்மையுடன் உள்ளதா என ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு ஆய்வினை தொல்லியல் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

thanjai periya koil
thanjai periya koil
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 6:39 PM IST

thanjai periya koil

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோயில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் உள்ள 216 அடி விமான கோபுரத்தில் உள்ள கலசத்துக்கு அருகே இடிதாங்கியும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இடி தாங்கி உரிய முறையில் செயல்படுகிறதா என மாதம் ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை, ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை என ஆய்வு செய்யப்படும். கோபுரத்தின் அருகில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கியின் மூலம் கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.

இந்த நிலையில் இடிதாங்கி உரிய சிரத்தன்மையுடன் உள்ளதா என ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு ஆய்வு இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் அனில்குமார் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் துறை அலுவலர்கள் சங்கர் சீதாராமன் எலக்ட்ரிக் பிரிவைச் சேர்ந்த பிரசாத் கட்டுமான தொழிலைச் சேர்ந்த மதன்குமார் மற்றும் செந்தில்குமார் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

அப்போது இடி, மின்னல் ஏற்படும் போது கட்டிடம் பாதுகாப்பாக உள்ளதா இதனால் மக்களுக்குப் பாதிப்பு ஏதுவும் ஏற்படுமா என இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இடிதாங்கியில் பொருத்தப்பட்டுள்ள எர்த் கம்பி உரிய முறையில் உள்ளதா எனவும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முடிந்து அதன் அறிக்கையைக் குழுவினர் அதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்க உள்ளனர்.

அதன் பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்து இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா அல்லது வேறு பொருத்தப்பட வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்து முடிவு செய்வார்கள். இதனைத் தொடர்ந்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் இடிதாங்கிகளை இந்த குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.3.54 கோடி மதிப்புடைய வைரம், தங்க நகைகள் பறிமுதல்.. கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி.. - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.