ETV Bharat / state

“இடம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை” - கூடங்குளம் சி பிரிவு தேர்வு தொடர்பாக அப்பாவு கடிதம்!

TN Assembly Speaker Appavu: கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர் தேர்வு, விதிகளுக்கு புறம்பாக நடைபெறுகிறது என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டி உள்ளார்.

TN Assembly Speaker Appavu
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 7:01 PM IST

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையப் பணியாளர் தேர்வு, விதிகளுக்கு புறம்பாக நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு, இந்திய அணுசக்தி துறை செயலாளர் மற்றும் இந்திய அணுமின் உற்பத்தி கழகத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், "வருகிற 3ஆம் தேதி நடைபெற இருக்கும் சி -பிரிவு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான பணியாளர்கள் தேர்வு சட்டத்துக்கு புறம்பாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி, இந்திய அணுசக்தித் துறை செயலாளரைச் சந்தித்து, கடந்த 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி செய்து கொண்ட ஒப்பந்தப்படியே, சி -பிரிவுக்கான பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று நேரில் சென்று கோரிக்கை மனு அளித்து விவரித்தேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும், அதன்படி அவர்கள் தனக்கு உறுதிமொழி அளித்ததாகவும், ஆனால் அதையும் மீறி தற்போது சி- பிரிவு பணியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது என கடிதத்தில் கூறியுள்ளார்.

முன்னதாக, கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் அணுமின் நிலையம் கடந்த 2009ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அங்கு, தற்போது 2 அலகுகளில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 3, 4, 5, 6 ஆகிய அலகுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அணு உலையால் ஆபத்து இருப்பதால், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக ஆரம்ப கட்டத்திலிருந்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பணி நியமனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், குறிப்பாக நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை என்பது உள்பட பல்வேறு உறுதியை அரசு கொடுத்திருந்தது. கடந்த 2011ஆம் ஆண்டு வரை இந்த நிலையே கடைபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எக்கனாமி வகுப்பில் பயணித்த ரஜினிகாந்த்… வைரலாகும் புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.