ETV Bharat / state

காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை! கணக்கில் வராத பணம் பறிமுதல்! - KAVERIPAKKAM SUB REGISTRAR OFFICE

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.46 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Kaveripakkam Sub Registrar office
காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் பதிவறை, கம்ப்யூட்டர் அறை மற்றும் தரகர்களிடமிருந்து பறிமுதல் என கணக்கில் வராத பணம் மொத்தம் ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட ஆய்வுக் குழு துணை அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவலும் சென்றது.

அதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன், மாவட்ட ஆய்வுக் குழு துணை அலுவலர் முருகன் தலைமையில், காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் காவேரிப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் நிற்காமல் வேகமாக சென்ற ரயில் ரிவர்ஸில் வந்ததால் பரபரப்பு!

அப்போது சார் பதிவாளர் அலுவலகத்தின் மெயின் கேட்டை பூட்டிக்கொண்டு போலீசார் உள்ளே சென்றனர். அதன் பின்னர், பதிவறை மற்றும் கம்ப்யூட்டர் அறையை சோதனை செய்ததில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.23 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும், அங்கு இருந்த 4 புரோக்கர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர். சுமார் ஐந்து மணி நேரம் நடந்த இந்த சோதனையில், மொத்தமாக கணக்கில் வராத பணம் ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.