சென்னை: நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - தூத்துக்குடி; சென்னை - நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூர் - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயில்: டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06186) அக்டோபர் 8ம் தேதி அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
Special Trains for Puja Festival!!!
— Southern Railway (@GMSRailway) October 5, 2024
Train No. 06186/06187 Dr MGR Chennai Central – Tuticorin – Dr MGR Chennai Central Festival Specials
Advance Reservation for the above special trains are open.#SouthernRailway pic.twitter.com/CopmJKOarc
மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06187) தூத்துக்குடியில் இருந்து அக்டோபர் 9ம் தேதி அன்று மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.
இரு மார்க்கத்திலும் இந்த ரயில்கள் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (06178) அக்டோபர் 9ம் தேதி அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
Special Trains for Puja Festival!!!
— Southern Railway (@GMSRailway) October 5, 2024
Train No. 06178/06179 Dr MGR Chennai Central – Nagercoil – Dr MGR Chennai Central Festival Specials
#SouthernRailway pic.twitter.com/hxeFQGvSAD
மறு மார்க்கத்தில் செல்லும் சிறப்பு ரயில் (06179) அக்டோபர் 10ம் தேதி இரவு 7.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.
இரு மார்க்கத்திலும் இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதையும் படிங்க: தாம்பரம் - கொச்சுவேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
கோயம்புத்தூர் - சென்னை சிறப்பு ரயில்: கோவை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (06171) நாளை (அக்.6) கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் சிறப்பு ரயில் (06172) அக்டோபர் 7ம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 6 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடையும்.
Special Trains for Puja Festival!!!
— Southern Railway (@GMSRailway) October 5, 2024
Special trains will be operated to clear extra rush of passengers during Puja festival
Train No. 06171/06172 Coimbatore – Chennai Egmore - Coimbatore/Podanur Superfast Festival Specials.#SouthernRailway pic.twitter.com/JqeCFvS755
இரு மார்க்கத்திலும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்