ETV Bharat / state

சிஏஏ சட்டத்தை மறுக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை - அண்ணாமலை தகவல் - Citizenship Amendment Act 2019

K.Annamalai: சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு 100 சதவிகித உரிமை உள்ளதாகவும், மாநில அரசுக்கு இவ்விவகாரத்தில் எவ்வித உரிமையும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai Said state governments have no right to deny implementation of CAA

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 8:01 AM IST

Updated : Mar 16, 2024, 8:33 AM IST

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை ஐந்து ரூபாய்க்கு குறைப்பதாகவும், சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் வரைக்கும் குறைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது வரை, அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் முதலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு, இதுகுறித்து கேட்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர் நல்ல அரசியல்வாதி. எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மத்திய அரசை குறைகூறி வருகிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால், அவர் நீதிமன்றத்திற்கு செல்லலாமே. இச்சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது. எந்த விதத்திலும் எதிரானது அல்ல. முதலமைச்சர் ஸ்டாலின் செய்தித்தாள் கூட படிப்பதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிஏஏ என்றால் என்ன? என்பது கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை. சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு 100 சதவிகித உரிமை உள்ளது. இதில் மாநில அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 35 பக்கங்கள் அடங்கிய குறிப்பை, மாநில அரசுகள் படித்து முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

தேர்தல் பத்திரத்தில் யார் அதிக அளவில் முதலீடு பெற்றுள்ளார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியைத் தாண்டாத ஒரு கட்சியான திமுக, ரூ.600 கோடி வாங்கியுள்ளார்கள். பாஜக 19 மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ளது.

ஒப்பிட்டுப் பாருங்கள் சராசரியை விட குறைவாகத்தான் பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. விசிக தலைவர் திருமாவளவனுக்கு வலது கரமாக ஆதவ் அர்ஜுனன் செயல்பட்டு வருகிறார். இவர் லாட்டரி மார்டின் மருமகன். தேர்தல் பத்திரங்களை பெருமளவு வழங்கியது, லாட்டரி மார்டின் தான். விசிக மற்றும் திமுகவுக்கு பெருமளவு நிதி உதவி இவர்கள் மூலமாக வழங்கப்பட்டு உள்ளது.

கோவையில் பிரதமர் மோடியின் Road Show-வைத் தடுக்க திமுக அரசு முயன்றது. ஆனால் நீதிமன்றமோ, பாஜகவிற்கு Road Show நடத்த அனுமதி வழங்கியது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. உறுதியாக கன்னியாகுமரியில் தாமரை மலரும். மற்ற தொகுதிகளிலும் தாமரை மலர்ந்தே தீரும்" என குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் திறக்க மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

Last Updated : Mar 16, 2024, 8:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.